ADDED : ஏப் 24, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை:மானாமதுரை அருகே உள்ள செங்கோட்டை கிராமத்தை சேர்ந்த அர்ச்சுனன் மகன் செல்லத்துரை 56,விவசாயியான இவர் செங்கோட்டை கிராமத்தில் புதிதாக வெட்டப்பட்ட கிணற்றில் குளிப்பதற்காக சென்றவர் சில மணி நேரங்களுக்குப் பிறகு சடலமாக மிதந்துள்ளார்.
இதனை பார்த்தவர்கள் உடனடியாக மானாமதுரை போலீசாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்
