ADDED : ஆக 13, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை, ஆக.
14 -
தேவகோட்டை அருகே உள்ள பகையணி கிராமத்தைச் சேர்ந்த செல்லையா மகன் முருகேசன். 60., விவசாயி. புதிய வீடு கட்டி விட்டதால் நேற்று காலை பழைய வீட்டை இயந்திரம் மூலம் இடித்துள்ளார். இயந்திரம் நின்றவுடன் வீட்டின் மேல் உள்ள பொருளை எடுத்த போது சுவர் மற்றும் மேல் தளம் இடிந்து முருகேசன் மீது விழுந்ததில் தலையில் அடிபட்டு முருகேசன் இறந்தார். தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
