ADDED : ஜன 25, 2025 07:07 AM

காரைக்குடி : காரைக்குடியில் விவசாயி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடியில் உள்ள முத்துப்பட்டினம் 3வது வீதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி 54. விவசாயியான இவர் காரைக்குடி அதலைகண்மாய் வயலில் விவசாயம் செய்து வந்தார். காங்., கட்சியைச் சேர்ந்தவர்.
இவர் நேற்று முன்தினம் முதலே காணவில்லை என குடும்பத்தினர் தேடினர். நேற்று மதியம் காரைக்குடி அதலைக்கண்மாய் வயல் அருகே ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது இறந்து கிடந்தது முத்துப்பாண்டி என தெரியவந்தது.
உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். சொத்து தகராறு காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

