/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இயந்திரத்தை வைத்து நெல் அறுவடை விவசாயிகள் மும்முரம்
/
இயந்திரத்தை வைத்து நெல் அறுவடை விவசாயிகள் மும்முரம்
இயந்திரத்தை வைத்து நெல் அறுவடை விவசாயிகள் மும்முரம்
இயந்திரத்தை வைத்து நெல் அறுவடை விவசாயிகள் மும்முரம்
ADDED : பிப் 03, 2025 05:31 AM
திருப்புத்தூர்: திருப்புத்தூர் பகுதியில் மும்முரமாக நடைபெறும் அறுவடையில் பெருமளவு எந்திரங்கள் மூலமே நடைபெறுகிறது.
செலவு குறைவதுடன் நேரமும் மிச்சமாவதாக விவசாயிகள் கூறுகின்றனர். தொடர் மழையால் கண்மாய் நீரை பயன்படுத்தவில்லை.
நெடுமறம் பகுதியில் விருசுழியாறு மூலம் கண்மாய்களுக்கு நீர்வரத்து உள்ளது. பெரும்பாலும் மழைநீரை நம்பியே விவசாயம் செய்கின்றனர். நெல்சாகுபடி ஒரு போகம் நடைபெறும். பெரும்பாலான வயல்களில் எந்திரம் மூலமே அறுவடை செய்துள்ளனர்.
தொழிலாளர்களைப் பயன்படுத்தினால் செலவு அதிகரிப்பதுடன், நேரமும் கூடுதலாகி விடும். இதனால் எந்திரங்கள் வருகைக்கு காத்திருந்து அறுவடை செய்கின்றனர்.மேலும் கடந்த ஆண்டைக் காட்டிலும் மழைநீரை வைத்தே சாகுபடி நடந்ததால் மகசூல் அதிகரித்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நெடுமறம் சண்முகலெட்சுமி கூறுகையில், 'கதிர் அறுக்க ஆள் கிடைப்பதே கஷ்டம். கிடைத்தாலும் ஒரு நபர் ரூ.600 முதல் 800 வரை சம்பளம் கேட்கின்றனர்.
ஆட்கள் வைத்து அறுத்தால் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் செலவாகி விடும். இயந்திரம் மூலம் ஏக்கருக்கு ரூ.4000 மட்டுமே செலவாகும். வைக்கோல் சுருட்டவும் தனி மெஷின் வருது. ஏக்கருக்கு 50 சுருட்டு வரும். ஒரு சுருட்டு ரூ.40க்கு எடுத்து செல்கின்றனர். இயந்திர செலவு குறைவால் அதிகம் விரும்பி அறுவடை செய்கின்றனர்.

