/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாக்கோட்டையில் உர தட்டுப்பாடு விவசாயிகள் புகார்
/
சாக்கோட்டையில் உர தட்டுப்பாடு விவசாயிகள் புகார்
ADDED : நவ 02, 2025 10:30 PM
காரைக்குடி:  சாக்கோட்டை வட்டாரத்தில் தொடர் மழையால் விவசாயத்தில் தீவிரம் காட்டி வரும் நிலையில் உரங்கள் தட்டுப்பாட்டின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாக்கோட்டை வட்டாரத்தில் 4500 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் கண்மாய்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகிறது.
தற்போது, சாக்கோட்டை வட்டாரத்தில் விவசாயிகள் டீலக்ஸ் மற்றும் குண்டுநெல் ரகங்களை சாகுபடி செய்துள்ளனர்.
தொடர் மழையால் கடந்த மாதம் நாற்று நடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து,  விவசாயிகள் உரமிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் முறையாக,  உரங்கள் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுவதாக புகார் எழுப்பி வருகின்றனர். உர தட்டுப்பாடு ஏற்பட்டால், விலை அதிகமாகும் வாய்ப்பு ஏற்படும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்,  தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் கூறியதாவது, தற்போது சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது டீலக்ஸ் பொன்னி, குண்டு ரக நெல்  பயிரிட்டுள்ளோம். தற்போது உரத்தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயிகள் யூரியா, டி.ஏ.பி.,  உள்ளிட்ட உரங்கள் வாங்குவதற்கு விவசாயிகள் அலைந்து திரிகின்றனர். தவிர டி.ஏ.பி.,  வாங்கினால் கூடுதலாக நுண்ணுாட்ட உரம் வாங்க வேண்டும் என வற்புறுத்துகின்றனர் என்றனர்.

