ADDED : டிச 05, 2024 05:49 AM
சிவகங்கை: மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் உழவர் கடன் அட்டை திட்ட முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது; மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி, வேளாண்மை, கால்நடை மற்றும் மீன்வள துறையினர் இணைந்து நடத்தும் கடன் அட்டை வழங்கும் திட்ட முகாம் ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக நடைபெற உள்ளது. அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்.
டிச., 5 சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், டிச., 7 ல் திருப்புவனம், டிச., 10 ல் மானாமதுரை, டிச., 12 ல் தேவகோட்டை மற்றும் கண்ணங்குடி, டிச., 17 ல் சாக்கோட்டை மற்றும் கல்லல், டிச., 19 ல் திருப்புத்துார், டிச., 21 ல் சிவகங்கை மற்றும் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை முகாம் நடைபெறும். விவசாயிகள் விண்ணப்பங்களை முகாமில் சமர்பிக்கலாம். வட்டார வேளாண்மை அலுவலகத்திலும் நேரடியாக வழங்கி பயன்பெறலாம், என்றார்.