/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள் சாமியார்பட்டி விவசாயிகள் வேதனை
/
தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள் சாமியார்பட்டி விவசாயிகள் வேதனை
தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள் சாமியார்பட்டி விவசாயிகள் வேதனை
தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள் சாமியார்பட்டி விவசாயிகள் வேதனை
ADDED : ஜன 25, 2024 05:21 AM

சிவகங்கை: சிவகங்கை அருகே சாமியார்பட்டியில் நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருவதால் அவற்றை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்த போவதாகவும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பருவமழையை நம்பி விவசாயிகள் நேரடி மானாவாரியாக நெல் விதைத்துள்ளனர். ஆனால் மாவட்டத்தில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை, மாவட்டத்தில் பெருவாரியான பாசன கண்மாய்களில் நீர்வரத்தின்றி போனது. மழை பெய்யும் கண்மாயில் நீர் இருக்கும் என்று நம்பி விவசாயிகள் நெல் நடவு செய்திருந்தனர். சாமியார்பட்டி, வாணியங்குடி, கீழகண்டனி பகுதிகளில் ஜெ.சி.எல் ரக நெல்லை நடவு செய்திருக்கின்றனர். ஆனால் போதிய தண்ணீரின்றி பயிர்கள் கருகி வருகின்றன.
சாமியார்பட்டி விவசாயி ராஜ்குமார்: இந்தாண்டு மழை பெய்யும் என்று நம்பி ஒன்றரை ஏக்கர் நெல் விவசாயம் செய்துள்ளேன். போதிய மழை பெய்யாததால் கண்மாய்க்கு நீர் வரத்தின்றி நெற்பயிர்கள் கருகி வருகிறது. ஏக்கருக்கு 35 ஆயிரம் வரை செலவு செய்துள்ளேன். நல்ல விளைச்சல் இருந்தால் 40 மூடை நெல் கிடைக்கும். தற்போது அதற்கு வழியில்லை. இவற்றை அறுவடை செய்தும் பலனில்லை அரசு எங்களை போன்ற விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.