/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தண்ணி காட்டும் மழையால் தயக்கம் காட்டும் விவசாயிகள்
/
தண்ணி காட்டும் மழையால் தயக்கம் காட்டும் விவசாயிகள்
தண்ணி காட்டும் மழையால் தயக்கம் காட்டும் விவசாயிகள்
தண்ணி காட்டும் மழையால் தயக்கம் காட்டும் விவசாயிகள்
ADDED : அக் 05, 2024 04:15 AM

சிங்கம்புணரி: தமிழகத்தில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை தண்ணி காட்டும் வகையில் காலம் தவறி பெய்வதால் சிங்கம்புணரி விவசாயிகள் வேளாண் பணிகளை துவக்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இத்தாலுகாவில் சிங்கம்புணரி, பிரான்மலை, எஸ்.புதுார், ஏரியூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக நெல் விவசாயம் திருப்தியாக இல்லை. நிலத்தடி நீர் குறைவு, பருவம் தவறி பெய்யும் மழை என பல்வேறு காரணங்களால் பல விவசாயிகள் நெல் சாகுபடியை செய்யாமல் மாற்று விவசாயத்தை தேடி வருகின்றனர்.
சிலர் மட்டும் கடந்த ஆண்டு நெல் பயிரிட்டு கடைசி நேரத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் குறைந்த அளவு நெல்லையே அறுவடை செய்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு கூடுதல் மழை பெய்யக்கூடும் என அறிவிப்பு வந்தாலும் விவசாயிகள் தயக்கத்தில் உள்ளனர். ஆடிப்பட்டத்தில் விவசாயப் பணிகள் துவங்கப்படவில்லை. புரட்டாசி மாதத்தில் பரவலாக நாற்று நடும் பணி முடிந்து பயிர்கள் செழித்து வளர்ந்திருக்க வேண்டிய நிலையில் இன்னும் பல இடங்களில் விவசாயிகள் வயல்களை உழும் பணியை கூட துவங்கவில்லை.
நாற்று பாவியும் பல இடங்களில் அவை வளர்ச்சி குறைவாக உள்ளது, சில இடங்களில் வளர்ந்த நாற்றுகள் பிடுங்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. அடுத்த சில தினங்களில் தொடர் மழையை பொறுத்தே விவசாய பணியில் கவனம் செலுத்த முடியும், அதுவரை தயக்கத்தில் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.