/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி அருகே மழை இல்லாததால் பயிரை காப்பாற்ற போராடும் விவசாயிகள்

ADDED : டிச 05, 2024 05:57 AM

இளையான்குடி: இளையான்குடி அருகே திருப்புக்குழி,ஆத்திவயல் சுற்றுவட்டார கிராமங்களில் போதிய மழை இல்லாததால் பயிர்களை காப்பாற்ற வேறு வழியின்றி உப்புத் தண்ணீரை விவசாயிகள் பாய்ச்சி வருகின்றனர்.
இளையான்குடி அருகே திருப்புக்குழி,இடைக்காட்டூர், ஆத்திவயல், மொச்சியேந்தல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.
இப்பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தினால் நெற்பயிர்கள் பரியும் நேரத்தில் தண்ணீர் இல்லாமல் போர்வெல் மூலம் கிடைக்கும் உப்பு தண்ணீரை வேறு வழியின்றி பயிர்களை காப்பாற்ற பாய்ச்சி வருகின்றனர்.இந்த தண்ணீரும் சில நாட்கள் மட்டுமே கிடைக்கும் நிலையில் மீண்டும் மழை பெய்தால் தான் பயிர்களை காப்பாற்ற முடியும் என்ற நிலை உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.