/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வயலில் வீசப்படும் மதுபாட்டிலால் விவசாயிகள் தவிப்பு; கால்களை பதம் பார்க்கும் கண்ணாடி துகள்கள்
/
வயலில் வீசப்படும் மதுபாட்டிலால் விவசாயிகள் தவிப்பு; கால்களை பதம் பார்க்கும் கண்ணாடி துகள்கள்
வயலில் வீசப்படும் மதுபாட்டிலால் விவசாயிகள் தவிப்பு; கால்களை பதம் பார்க்கும் கண்ணாடி துகள்கள்
வயலில் வீசப்படும் மதுபாட்டிலால் விவசாயிகள் தவிப்பு; கால்களை பதம் பார்க்கும் கண்ணாடி துகள்கள்
ADDED : நவ 25, 2024 06:23 AM

திருப்புவனம்: திருப்புவனம் பகுதியில் வயல்களில் அமர்ந்து கூட்டம் கூட்டமாக மது அருந்தும் கும்பல் பாட்டில்களை உடைத்து போடுவதால் விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் விவசாய பணிகளில் ஈடுபட முடியாமல் தவித்து வருகின்றனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் விவசாய பணிகள் நடந்து வருகின்றன. வயல்களை உழவு செய்து நாற்றங்கால் அமைத்து நெல் விவசாய பணிகள் நடந்து வருகிறது.
விதை தூவ, நாற்று பறிக்க, உழவு செய்ய என அனைத்து பணிகளும் கூலி தொழிலாளர்களை நம்பியே நடந்து வருகின்றன. திருப்புவனம், மடப்புரம், தேளி, ஏனாதி, வடகரை உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பணிகள் நடந்து வருகின்றன.
இதில் பெரும்பாலான வயல்களில் கூட்டம் கூட்டமாக மது அருந்துபவர்கள் மது அருந்தியதும் கண்ணாடி பாட்டில்களை வயல்களில் உடைத்து போட்டு விடுகின்றனர். இதனால் வயல்களில் இறங்கி பணியாற்றும் தொழிலாளர்களின் கால்களை கண்ணாடி துகள்கள் பதம் பார்க்கின்றன. திருப்புவனம் அருகே வடகரையில் இருந்து வடக்கூர்,திருமணப்பதி செல்லும் மூன்று கி.மீ., தூரமுள்ள சாலையின் இருபுறமும் 150 ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. இந்த வழிநெடுகிலும் குடிமகன்களின் ஆதிக்கம் அதிகம், சாலையோரம் அமர்ந்து குடிப்பதுடன் போதையில் கண்ணாடி பாட்டில்களை வயல்களில் உடைத்து போடுகின்றனர்.
இது குறித்து விவசாயி புயல்ராஜன் கூறியதாவது, நாற்று நடும் பணிக்கு கூலி தொழிலாளிக்கு ரூ.400 சம்பளம் தருகிறோம். இந்தவயல்களில் குடிமகன்கள் வீசி எரியும் பாட்டில்கள் குத்தி, சிகிச்சைக்காக ரூ.1000 வரை செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பல முறை போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. வடகரையில் இருந்து திருமணப்பதி செல்லும் சாலை பூவந்தி மற்றும் சிலைமான் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், இவ்விரு ஸ்டேஷன் போலீசாரும் ரோந்து பணிக்கு வருவதே இல்லை. வயலில் அமர்ந்து மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.