/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பூசி மெழுகிய மடைகளால் விவசாயிகள் அவதி
/
பூசி மெழுகிய மடைகளால் விவசாயிகள் அவதி
ADDED : நவ 15, 2024 07:04 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி தாலுகாவில் பழுதுபார்ப்பு என்ற பெயரில் பூசி மெழுகிய கண்மாய் மடைகளில் கசிவு ஏற்படுவதால் விவசாயிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.
இத்தாலுகாவில் சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியங்களில் 1000க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கண்மாய்கள் உள்ளன.
பல கண்மாய்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மடைகள் சீரமைக்கப்படாமல் பழுதடைந்துள்ளது.
ஒரு சில மடைகள் பெயரளவுக்கு பழுதுபார்ப்பு என்ற பெயரில் கடந்த காலங்களில் பூசி மெழுகப்பட்டது. இந்நிலையில் சிங்கம்புணரி பகுதி ஆறுகளில் தண்ணீர் வருவதால் சில கண்மாய்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் விவசாயிகள் பயிர் சாகுபடியை துவக்கியுள்ளனர். ஆனால் பூசி மெழுகிய மடைகளில் நீர்க்கசிவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இரவு பகலாக மடைகளை கண்காணித்தும், அடைத்தும் தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது.
எனவே வருங்காலங்களில் அனைத்து கண்மாய் மடைகளையும் முறையாக சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.