/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குறையும் பயிர் சாகுபடியால் விவசாயிகள் கவலை எஸ்.புதுார் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகுமா
/
குறையும் பயிர் சாகுபடியால் விவசாயிகள் கவலை எஸ்.புதுார் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகுமா
குறையும் பயிர் சாகுபடியால் விவசாயிகள் கவலை எஸ்.புதுார் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகுமா
குறையும் பயிர் சாகுபடியால் விவசாயிகள் கவலை எஸ்.புதுார் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகுமா
ADDED : மார் 22, 2025 04:57 AM
எஸ்.புதுார்: எஸ்.புதுாரில் பயிர் சாகுபடி குறைந்து வரும் நிலையில் இப்பகுதியைபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியுள்ளனர்.
மாவட்டத்தில் முக்கியவேளாண் பகுதியாக விளங்கும் இவ்வொன்றியத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எக்டேர் பாசன நிலங்கள் உள்ளன.
நெல் 1000, தென்னை 1500, மா 1500, கடலை 300, பருத்தி 80, கரும்பு உள்ளிட்ட இதர பயிர்கள் 100 எக்டேர்களில் சராசரியாக சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் சாகுபடி நடக்கும் இப்பகுதியில் சில வருடங்களாக சிலர் நிலங்களை வாங்கி பண்ணை தோட்டங்களாக மாற்றி வருகின்றனர்.
சில இடங்களில் வீட்டுமனைகளாகவும் மாறி வருகிறது. இதனால் விவசாயம் குறைய தொடங்கியுள்ளது. ஏற்கனவே காட்டு மாடு உள்ளிட்ட பிரச்னைகளால் பலரும் நெல், கடலை சாகுபடியிலிருந்து தென்னை, மா போன்ற நிரந்தர சாகுபடிக்கு மாறி வருகின்றனர்.
இதே நிலை தொடர்ந்தால் வருங்காலத்தில் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் முற்றிலும் அழியும் ஆபத்து உள்ளது.
விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றவும், பண்ணை தோட்டங்களாக மாற்றி கட்டுமானங்களை எழுப்பவும் அரசு தடை விதிக்க வேண்டும். மேலும் இவ்வொன்றியத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அனைத்து நீர்நிலை ஆக்கிரப்பையும் அகற்றி பயிர் சாகுபடியை மீட்டெடுக்க அனைத்து துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
எம்.பழனிக்குமார், செட்டிகுறிச்சி: இவ்வொன்றிய மக்களின் ஒரே வாழ்வாதார தொழில் விவசாயம் மட்டுமே. பல ஆண்டுகளாக விவசாயத்தையே நம்பி பிழைத்து வருகின்றனர். தற்போது பல்வேறு காரணங்களால் நெல், கடலை உள்ளிட்ட விவசாயம் குறைந்து வருகிறது. மிளகாயும் எதிர்பார்த்த அளவு லாபம் தராததால் சிலர் தரிசாக விட்டுள்ளனர்.
இதே நிலை தொடர்ந்தால் விளைநிலங்கள் வீட்டுமனைகள் ஆக மாறி விவசாயம் முற்றிலும் அழியும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயத்தை காப்பாற்றவேண்டும்.