ADDED : செப் 19, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை, மகனை மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் கைது செய்தனர்.
சிங்கம்புணரி வட்டம், எஸ்.புதுார் ஊ.ஒன்றிய. நடுநிலைப்பள்ளி ஒன்றில் புகார் பெட்டியில் கிடைத்த மனுவை பள்ளி தலைமையாசிரியை ஆய்வு செய்தார். அதில் 10 வயது மாணவி தன்னை இருவர் பாலியல் தொந்தரவு செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.
தலைமையாசிரியை திருப்புத்துார் மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தேவகி விசாரணையில் துவரங்குறிச்சி ராசு 65 மற்றும் அவரது மகன் முருகேசன் 38 ஆகியோர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் போக்சோ பிரிவில் கைது செய்து விசாரிக்கின்றனர்.