/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் ஊரணியால் நோய் பரவும் ...அச்சம்:கண்டுகொள்ளாத நகராட்சி சுகாதாரத்துறை
/
தேவகோட்டையில் ஊரணியால் நோய் பரவும் ...அச்சம்:கண்டுகொள்ளாத நகராட்சி சுகாதாரத்துறை
தேவகோட்டையில் ஊரணியால் நோய் பரவும் ...அச்சம்:கண்டுகொள்ளாத நகராட்சி சுகாதாரத்துறை
தேவகோட்டையில் ஊரணியால் நோய் பரவும் ...அச்சம்:கண்டுகொள்ளாத நகராட்சி சுகாதாரத்துறை
UPDATED : டிச 04, 2025 05:23 AM
ADDED : டிச 04, 2025 05:19 AM

தேவகோட்டை:தேவகோட்டையில் உள்ள ஊரணிகள் சுகாதார சீர்கேட்டால் நோய் பரவும் நிலை இருந்தும் அதிகாரிகள் மவுனம் காக்கின்றனர்.
தேவகோட்டை நகரில் 18 ஊரணிகள் உள்ளன. இதில் பெருமாள் கண்மாய் ஊரணி, காட்டூரணி, அழகப்பா பூங்கா ஊரணி ஆகிய ஊரணிகள் தான் ஊரணி போல் உள்ளன. மற்ற அனைத்து ஊரணிகளுமே ஊருணி போல் இல்லை. ஊருணிகளில் தண்ணீரை விட குப்பை, கழிவு தான் அதிகமாக உள்ளன. நகராட்சியினரே ஊரணி அருகில் தான் குப்பை சேகரிப்பு மையங்களை அமைத்து உள்ளனர். குப்பை பறந்து சுகாதார சீர்கேடாக காட்சியளிக்கின்றன.
ஒரு காலத்தில் ஊரணிகளுக்கு காவல் காக்க ஊழியர்கள் இருந்தனர். அனைத்து ஊரணியுமே குடிநீராக இருந்தது. இன்று கழிவு நீர் ஊரணிகளாக மாறிவிட்டது. வெள்ளையன் ஊரணி சுற்றியுள்ள கட்டடங்களின் செப்டிக் டேங்க் சேகரமாகும் பகுதியாக மாறிவிட்டது. சுகாதாரக்கேடாக கழிவுநீர் ஊரணிகளாக இருக்கும் அனைத்துமே கோயில், முன்பும் பின்பும் உள்ளது.
ஊருணிகளுக்கு வரும் கால்வாய்கள் மழைநீர் வடிகால் கால்வாய்களாக இருந்தன. நகராட்சியே பல இடங்களில் கால்வாய்களில் கழிவுநீர் சாக்கடை இணைத்ததால் பல ஊருணிகளில் வரத்து கால்வாய்களை அப்பகுதியினர் அடைத்து விட்டனர். இதனால் ஊரணிக்கு தண்ணீரும் வருவதில்லை.
ஊருணி படிகள் திறந்த வெளி கழிப்பிடமாக இருப்பதால் கோயில்களுக்கு வரும் பக்தர்கள் மூக்கை பிடித்து கொண்டு வருகின்றனர். 18 ஊரணிகளையும் துார்வாரி மராமத்து செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். பல முறை கலெக்டரிடம் மனு கொடுத்தும் விட்டனர்.

