/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருத்துவமனை வளாகத்தில் திரியும் நாய்களால் அச்சம்
/
மருத்துவமனை வளாகத்தில் திரியும் நாய்களால் அச்சம்
ADDED : ஆக 26, 2025 11:52 PM

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அரசு மருத்துவமனை வளாகத்தில் கூட்டமாக திரியும் நாய்களால் அங்கு வருபவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
பிரான்மலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ஏராளமான நாய்கள் திரிகின்றன. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களை நாய்கள் விரட்டுகின்றன. இதனால் அங்கு வருபவர்கள் அச்சத்துடன் வந்து செல்ல வேண்டியுள்ளது. பல்வேறு பகுதியில் வளர்த்த நாய்களை சிலர் இப்பகுதியில் கொண்டு வந்து விட்டுச் செல்வதால் நாய்களின் பெருக்கம் பிரான்மலையில் அதிகரித்து வருகிறது. எனவே தெரு நாய்களை அடைத்து வைத்து பராமரிக்கவும், கட்டுப்படுத்தவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.