/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் தெரு நாய்களால் அச்சம்
/
திருப்புவனத்தில் தெரு நாய்களால் அச்சம்
ADDED : ஜன 15, 2024 11:12 PM
திருப்புவனம்,: திருப்புவனத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். திருப்புவனம் நகரில் சுமார் 10 ஆயிரம் வீடுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். திருப்புவனம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளியில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
திருப்புவனத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றிதிரிகின்றன. ரோட்டோர இறைச்சி கடைகள், ஓட்டல்களில் வீசி எறியப்படும் கழிவுகளை உண்டு வாழும் இவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உரிய தடுப்பூசிகள் போடப்படாமல் வலம் வரும் நாய்களுக்கு அடிக்கடி வெறி பிடித்து ரோட்டில் செல்வோரை கடிக்கின்றன. பேரூராட்சி சார்பில் கடந்த சில ஆண்டாக தெரு நாய்களை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும்எடுக்கவில்லை. கூட்டமாக வரும் நாய்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.