/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் மின் டிரான்ஸ்பார்மர் சிமென்ட் கம்பம் சேதத்தால் அச்சம்
/
சிவகங்கையில் மின் டிரான்ஸ்பார்மர் சிமென்ட் கம்பம் சேதத்தால் அச்சம்
சிவகங்கையில் மின் டிரான்ஸ்பார்மர் சிமென்ட் கம்பம் சேதத்தால் அச்சம்
சிவகங்கையில் மின் டிரான்ஸ்பார்மர் சிமென்ட் கம்பம் சேதத்தால் அச்சம்
ADDED : மே 30, 2025 03:16 AM

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாக மின் டிரான்ஸ்பர் சிமென்ட் கம்பம் சேதமடைந்துள்ளதால், விபத்து அச்சம் நிலவுகிறது.
சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகம் வட்ட வடிவில் கட்டப்பட்டுள்ளது. திங்கள் தோறும் பொது குறைதீர் கூட்டம், மாதத்தின் கடைசி வெள்ளிதோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும். கலெக்டர் அலுவலகம் முன் மின் டிரான்ஸ்பார்மர் பொருத்தியுள்ளனர்.
இந்த மின் டிரான்ஸ்பார்மரில் குறைந்த அழுத்த மின் சப்ளையால், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மின் டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டுள்ள கம்பம் உடைந்து எலும்பு கூடாக காட்சி அளிக்கிறது.
மின்வாரிய நிர்வாகம் கலெக்டர் அலுவலகம் முன் சேதமடைந்துள்ள சிமென்ட் கம்பத்துடன், குறைந்த மின் அழுத்த பிரச்னை வராத வகையில் புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.