/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிப்.16 தொ.மு.ச., மறியல் போராட்டம்
/
பிப்.16 தொ.மு.ச., மறியல் போராட்டம்
ADDED : பிப் 13, 2024 06:40 AM
சிவகங்கை : பிப்.16ம் தேதி மறியல் போராட்டத்தில் தொ.மு.ச., ஈடுபடபோவதாக காரைக்குடி மண்டல பொதுச்செயலாளர் பச்சமால் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப்பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தொழிலாளர் நல சட்டங்களை நான்கு தொகுப்புகளாக மாற்றம் செய்து நீர்த்துப் போக செய்ததை கண்டித்தும், மோட்டார் தொழிலை பாதிக்கும் இந்திய தண்டனை சட்டம் பாரதிய நியாய சன்ஹிட்டா பிரிவு 106(1) மற்றும் 2 ஐ திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி பிப்.16ம் தேதி காரைக்குடி மண்டலம் சார்பாக ராமநாதபுரத்தில் மறியல் போராட்டம் நடக்க உள்ளதாக தெரிவித்தார்.