நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : பள்ளத்துார் கீழமேல் வீதியைச் சேர்ந்தவர் நாச்சியப்பன் மகள் மல்லிகா 52.
திருமணமாகவில்லை. பெருமாள் கோயில் அருகே இ சேவை மையம் நடத்தி வந்தார். கடன் தொல்லையில் இருந்தவர் வீட்டின் பின்புறம் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து காரைக்குடி அரசு மருத்துவமனையில் அவரை அவசர சிகிச்சையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் அங்கு உயிரிழந்தார்.

