தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/திருப்புவனத்தில் திருவிழா; அடிப்படை வசதி இல்லை

திருப்புவனத்தில் திருவிழா; அடிப்படை வசதி இல்லை

திருப்புவனத்தில் திருவிழா; அடிப்படை வசதி இல்லை


ADDED : மார் 09, 2024 08:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2024 08:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புவனம் : திருப்புவனத்தில் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா தொடங்கியுள்ளதையடுத்து அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்புவனம் ரேணுகாதேவி பூமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த நான்காம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினசரி சுற்றுவட்டார கிராம மக்கள் பலரும் அம்மனுக்கு அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை, கரும்பு தொட்டில் உள்ளிட்டவை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவர். தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வர்.

கோயில் எதிரே உள்ள மைதானத்தில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் உருவாக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் பலர் வந்து செல்கின்றனர்.

இங்கு குடிநீர், கழிப்பறை வசதி இல்லாததால் சிரமத்திற்குள்ளாகின்றனர். பேரூராட்சியினர் சாலையோர மணலை அகற்றி சுத்தப்படுத்தியுள்ளனர். மக்கள் வசதிக்காக குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us