நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப் பள்ளியில் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் ஏற்பட்டாலோ தமிழக அரசு ரூ.75 ஆயிரம் நிதி உதவி வழங்குகிறது. பள்ளியில் 5ஆம் வகுப்பு மாணவன் அருண் மற்றும் அவரின் தாயாரிடம் ரூ.75 ஆயிரத்திற்கான வங்கி வைப்புநிதி பத்திரத்தை வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயா வழங்கினார். உடன் வட்டார கல்வி அலுவலர்கள் ஜான்சார்லஸ், ஆலிஸ்மேரி கலந்துகொண்டனர்.