/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோடுகளில் திரியும் மாடுகளுக்கு அபராதம்: பேரூராட்சி எச்சரிக்கை
/
ரோடுகளில் திரியும் மாடுகளுக்கு அபராதம்: பேரூராட்சி எச்சரிக்கை
ரோடுகளில் திரியும் மாடுகளுக்கு அபராதம்: பேரூராட்சி எச்சரிக்கை
ரோடுகளில் திரியும் மாடுகளுக்கு அபராதம்: பேரூராட்சி எச்சரிக்கை
ADDED : நவ 08, 2025 01:25 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் நகரில் பரவலாக ரோடுகள், தெருக்களில் மாடுகள் உலா வருகின்றன. கூட்டமாக நிற்பதும், இரவில் ரோடுகளில் தங்குவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். மாடுகளும் காயமடைகின்றன. இதனைத் தவிர்க்க பேரூராட்சி பல முறை நடவடிக்கை எடுத்தும் இதுவரை மாடுகள் தெருக்களில் நடமாடுவதைத் தடுக்க முடியவில்லை,
இந்நிலையில் மீண்டும் மாடுகளை பொதுஇடங்களில் நடமாட தற்போது பேரூராட்சி தடை விதித்துள்ளது. தெருக்களில் திரியும் மாடுகளை உரிமையாளர்கள் பிடித்துச் சென்று தங்கள் வளாகத்தில் பராமரிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் பேரூராட்சியினரால் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். 48 மணி நேரத்திற்குள் மீட்கப்படாத மாடுகள் ஏலம் விடப்படும். மாடுகள் பிடிக்கும் போது மாடுகளுக்கு ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு பேரூராட்சி பொறுப்பல்ல என பேரூராட்சியினர் அறிவித்துள்ளனர்.