தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சர்வர் பிரச்னை யால் எப்.ஐ.ஆர்., தாமதம்

 சர்வர் பிரச்னை யால் எப்.ஐ.ஆர்., தாமதம்

 சர்வர் பிரச்னை யால் எப்.ஐ.ஆர்., தாமதம்


ADDED : பிப் 27, 2026 07:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 07:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் சர்வர் பிரச்னையால் எப்.ஐ.ஆர்., பதிவில் தாமதம் ஏற்படுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் 49 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்புத்துார், தேவகோட்டை உட்பட 5 சப் டிவிஷன்களாக போலீஸ் ஸ்டேஷன்கள் பிரிக்கப்பட்டுள்ளது. அதிக குற்றச்சம்பவங்கள் நடைபெறும் இடங்களாக சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை சப் டிவிஷன்கள் உள்ளன.

தமிழக அரசு தமிழக காவல்துறையின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக சி.சி.டி.என்.எஸ். 2.ஓ என்ற மென்பொருளை அனைத்து போலீஸ் ஸ்டேஷனிலும் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.

இதில் சமுதாய சேவைப் பதிவேடு (சி.எஸ்.ஆர்.), முதல் தகவல் அறிக்கை எப்.ஐ.ஆர்., மற்றும் முதல் நிலை விசாரணை ஆகியவைகளைப் பதிவு செய்ய வேண்டும்.

இந்த அப்டேட் செய்யப்பட்ட 2.ஓ மென்பொருள் அதிவிரைவு நெட்வொர்க் இருந்தால் தான் கிடைக்கிறது.

நெட்வொர்க் பிரச்னையால் புகார் தாரர்கள் கொடுக்கும் புகார்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து அதற்கான சி.எஸ்.ஆர்., மனு ரசீது வழங்க போலீசார் சிரமப்படுகின்றனர்.

இதனால் புகார் தாரருக்கு தான் கொடுத்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்ற அச்சம் ஏற்படுகிறது. ஒரு போலீஸ் ஸ்டேஷனில் ஒரு சி.எஸ்.ஆர்., பதிவதற்கே ஒரு நாளைக்கு மேல் ஆவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷனில் 2.ஓ திட்டத்தை செயல்படுத்துவதற்கான அதிவிரைவு நெட்வொர்க் கிடைக்க எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us