ADDED : அக் 17, 2024 05:30 AM
அ நிறம் | அளவு
இளையான்குடி: இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் தீயணைப்பு துறையினர் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சிக்கு தாசில்தார் முருகன், தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமை தாங்கினர்.
நிகழ்ச்சியில் முருகன், ஷேக் அப்துல்லா உள்ளிட்ட தீயணைப்பு துறை வீரர்கள் மழைக்காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது, மழையினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து விளக்கமளித்தனர்.
