நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் பாபா அமிர்பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பசுமைப்படை மாணவர்களுக்கு தீயணைப்பு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளி தாளாளர் பாபா அமிர்பாதுஷா முன்னிலை வகித்தார். தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் துறை குழு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
தீயணைப்பு, பேரிடர் காலங்களில், விபத்துக்களில் மீட்பு பணி குறித்து செயல் விளக்கம் அளித்தனர். மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர். பாபா பள்ளி பசுமைப்படை ஆசிரியர் முத்தமிழ்கனி, உடற்கல்வி ஆசிரியர் சிலம்பரசன் ஏற்பாட்டை செய்தனர்.