ADDED : ஜூலை 26, 2025 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: கட்டிக்குளம் பகுதியில் நெல் அறுவடை நடக்கிறது. அப்பகுதியில் சேகரமான வைக்கோலை லாரியில் ஏற்றி மதுரைக்கு கொண்டு சென்ற போது முத்தனேந்தல் ரயில்வே கேட் அருகே மின் கம்பியில் உரசியதில் தீப்பிடித்து பரவியது.
மானாமதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர். லாரியில் தீப்பிடிக்காததால் பொருட் சேதமும், உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டது.