பட்டாசு கடை லைசென்ஸ்அக்., 18 க்குள் விண்ணப்பிக்கலாம்
பட்டாசு கடை லைசென்ஸ்அக்., 18 க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 22, 2026 03:52 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை, செப்.
23-தீபாவளிக்காக தற்காலிக சில்லறை விற்பனை பட்டாசு கடைக்கு அக்., 18 க்குள் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட அளவில் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக சில்லறை பட்டாசு விற்பனை கடைக்கு உரிய லைசென்ஸ் பெற வேண்டும். இதற்காக கடையின் திட்ட வரைபடம் (புளூ பிரிண்ட்), பத்திர ஆவணம், ரூ.500 வங்கியில் செலுத்தியதற்கான அசல் சலான், பான், ஆதார், ரேஷன் கார்டு, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வரி ரசீது, பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் அந்தந்த பகுதி இ- சேவை மையங்களில் அக்., 18 க்குள் விண்ணப்பிக்கவும். உரிய விசாரணை செய்து நவ., 1 க்குள் தற்காலிக லைசென்ஸ் வழங்கப்படும் என்றார். //
