ADDED : அக் 24, 2024 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் பாபா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்பு துறையினரால் தீபாவளியை முன்னிட்டு வெடி வெடிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தீயணைப்பு துறை உதவி ஆய்வாளர் ஆனந்த சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு தீபாவளி பட்டாசுகளை எவ்வாறு வெடிக்க வேண்டும் என்பது பற்றியும் தீக்காயங்கள் ஏற்பட்டால் எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்தும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
தீயணைப்பு துறை அருள்செல்வன், ஆனந்த செல்வம், சதீஷ்குமார், வினோத்குமார், இளையராஜா ஆகியோர் செயல் விளக்கம் அளித்தனர். தாளாளர் பாபா அமீர்பாதுஷா, முதல்வர் வரதராஜன் பங்கேற்றனர்.

