/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முதல் மாநாடு- எதிர்க்கட்சி தலைவர் 2வது மாநாடு முதல்வர் த.வெ.க.,- ஆனந்த் நம்பிக்கை

ADDED : ஆக 10, 2025 01:32 AM

திருப்புவனம்:விக்கிரவாண்டி முதல் மாநாடு முடிந்த உடன் விஜய்யை எதிர்க்கட்சி தலைவராக மக்கள் ஏற்று கொண்டனர். மதுரை மாநாடு முடிந்த உடன் முதல்வராக ஏற்று கொள்வார்கள் என த.வெ.க., பொதுச்செயலாளர் ஆனந்த் பேசினார்.
தமிழக வெற்றி கழகத்தின் 2வது மாநாடு மதுரையில் நடைபெற உள்ளதை ஒட்டி திருப்புவனத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் சி.டி. நிர்மல்குமார் பங்கேற்றனர்.
ஆனந்த் பேசும் போது:
விக்கிரவாண்டி முதல் மாநாடு முடிந்த உடன் விஜய்யை எதிர்க்கட்சி தலைவராக மக்கள் ஏற்று கொண்டனர். மதுரை மாநாடு முடிந்த உடன் முதல்வராக ஏற்று கொள்வார்கள், 2026ல் அமைவது மகளிருக்கான ஆட்சியாக இருக்கும்.
மற்ற கட்சிகள் மாநாட்டிற்கு பஸ், வேன், கார் ஏற்பாடு செய்து அழைத்து வருவார்கள். த.வெ.க., மாநாட்டிற்கு மட்டும் தான் தொண்டர்கள் நடந்து கூட வந்து சேர்வார்கள்.
ஒவ்வொரு கட்சியும் மாநாடு நடத்த ஒரு வருடம் ஆகும். நாம் சில நாட்களிலேயே மாநாடு நடத்துகிறோம்.
சிவகங்கை தெற்கு இரண்டு தொகுதிகளை உள்ளடக்கியது. மாநாட்டிற்கு குறைந்த பட்சம் 50 ஆயிரம் பேராவது வருவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.
மாநாட்டிற்கு கைக்குழந்தைகளை அழைத்து வர வேண்டாம்.
இவ்வாறு பேசினார்.