/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மணிமுத்தாறு வெள்ளத்தில் சிக்கி மீன்பிடித்த தொழிலாளி பலி
/
மணிமுத்தாறு வெள்ளத்தில் சிக்கி மீன்பிடித்த தொழிலாளி பலி
மணிமுத்தாறு வெள்ளத்தில் சிக்கி மீன்பிடித்த தொழிலாளி பலி
மணிமுத்தாறு வெள்ளத்தில் சிக்கி மீன்பிடித்த தொழிலாளி பலி
ADDED : டிச 17, 2024 07:26 AM
தேவகோட்டை; சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மார்கண்டேயன்பட்டியை சேர்ந்த சுப்பையா மகன் ஆறுமுகம். 43. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சலவை தொழிலாளியான ஆறுமுகம் கான்கிரீட் பணிகளுக்கும் செல்வார். தேவகோட்டையில் மணிமுத்தாறில் கடந்த மூன்று தினங்களாக தண்ணீர் தரை பாலத்திற்கு மேலேயேயும் ஓடியது.
தரைப்பாலம் அருகே ஆனையடிவயல் அணைக்கட்டு உள்ளது. நேற்று மாலை ஆறுமுகமும் நண்பர்கள் சிலரும் மீன்பிடிக்க சென்றனர். ஆறுமுகம் அணைக்கட்டுக்கு கீழே ஆற்றில் இறங்கினார். சுழலில் சிக்கினார். நண்பர்கள் ஆறுமுகத்தை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர் இறந்து விட்டதாக கூறியதை தொடர்ந்து உடலை வீட்டிற்கு கொண்டு சென்றனர். தகவல் அறிந்த போலீசார், வருவாய்த்துறையினர் ஆறுமுகம் வீட்டிற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வேலாயுதபட்டனம் போலீசார் விசாரிக்கின்றனர்.