/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மின்சாரம் தாக்கி மீன் வியாபாரி பலி
/
மின்சாரம் தாக்கி மீன் வியாபாரி பலி
ADDED : டிச 15, 2024 07:16 AM
திருப்புத்துார் : காரைக்குடி சூடாமணிபுரத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் கிருஷ்ணன்48. இவர் மீன் வியாபாரி. நேற்று அதிகாலை 3:45 மணிக்கு திருப்புத்தூர் அருகே புதுக்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள மொத்த மீன் சந்தையில் மீன் வாங்க சென்றார். சபரிமலை செல்ல மாலை அணிந்திருந்ததால் செருப்பு அணியாமல் சென்றுள்ளார். மீன்களை வாங்கி விட்டு வாகனத்தில் ஏற்ற வந்த போது சகதியில் வழுக்கி தடுமாறியுள்ளார். அப்போது அருகிலிருந்த மின் விளக்கு பொருத்தப்பட்ட கம்பியை பிடித்துள்ளார். அந்த கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் கிருஷ்ணன் மயங்கி விழுந்தார்.
அருகிலிருந்தவர்கள் கிருஷ்ணனை திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்த போது அவர் முன்னதாகவே இறந்து விட்டது தெரிந்தது.