/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயில்வேயில் வேலை எனக்கூறி 5 பேர் ரூ.25 லட்சம் மோசடி
/
ரயில்வேயில் வேலை எனக்கூறி 5 பேர் ரூ.25 லட்சம் மோசடி
ரயில்வேயில் வேலை எனக்கூறி 5 பேர் ரூ.25 லட்சம் மோசடி
ரயில்வேயில் வேலை எனக்கூறி 5 பேர் ரூ.25 லட்சம் மோசடி
ADDED : பிப் 11, 2025 07:51 AM
சிவகங்கை : ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே மொட்டையன் வயல் கருப்பணன் மனைவி சீதா, 54. இவர், மதுரையில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது மதுரையைச் சேர்ந்த ரமேஷ் மனைவி செல்வி என்பவரின் பழக்கம் கிடைத்தது.
செல்வி, 'இந்தியன் ரயில்வே கமிட்டி உறுப்பினராக இருக்கிறேன். உயர் அதிகாரிகளிடம் பேசி படித்த இளைஞர்களுக்கு வேலை வாங்கி கொடுத்துக் கொண்டிருக்கிறேன். யாரேனும் உறவினர் படித்திருந்தால் சொல்லுங்கள்; வேலை வாங்கித் தருகிறேன்' என கூறினார்.
அதை நம்பிய சீதா, தன் மகன் சிவராமனுக்கும், நாத்தனார் லட்சுமியின் மகன் மெய்யப்பனுக்கும் ரயில்வேயில் வேலை பெற்றுத்தர கேட்டுக் கொண்டார். கடந்த 2022 மே முதல் 25 லட்சம் ரூபாயை செல்வியின் குடும்பத்தினர் பெற்றுள்ளனர். பின் வேலை வாங்கித் தராமலும் பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் இருந்ததால், 2024 செப்., 24ல் சிவகங்கை எஸ்.பி.,யிடம் சீதா புகார் மனு அளித்தார்.
மனுவை விசாரித்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், உறவினர்களான செல்வி, ரமேஷ், பாலா, சிந்துஜா, ராஜா மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.