/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் இன்று கொடியேற்றம்
/
திருப்புவனத்தில் இன்று கொடியேற்றம்
ADDED : ஏப் 02, 2025 06:34 AM
திருப்புவனம் : திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர்- சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று விக்னேஷ்வர பூஜை நடந்தது.
இன்று (ஏப்ரல் 2ம் தேதி) காலை 9:15 முதல் 10:40 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற உள்ளது. 9ம் தேதி காலை10:30 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், 10ம் தேதி வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு தேரோட்டமும் நடைபெற உள்ளது.
தினசரி அம்மனும் சுவாமியும் பல்வேறு மண்டகப்படிதாரர்கள் சார்பில் வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர்.
பங்குனி விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் தண்ணாயிரம் மற்றும் பக்தர்கள், கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.

