தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கீழடியில் எரியாத ஹைமாஸ் விளக்கு

 கீழடியில் எரியாத ஹைமாஸ் விளக்கு

 கீழடியில் எரியாத ஹைமாஸ் விளக்கு


ADDED : ஆக 12, 2026 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2026 04:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கீழடி: கீழடி விலக்கில் போலீசார் சோதனை சாவடி அருகே கடந்த மூன்று மாதங்களாக ஹைமாஸ் விளக்கு எரியாததால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

கீழடி விலக்கில் போலீசார் சோதனை சாவடி அமைந்துள்ளது. கீழடியை சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மதுரைக்கு வேலைக்கு சென்று டூவீலரில் திரும்புகின்றனர், இவர்களின் வசதிக்காக கீழடி விலக்கில் ஹைமாஸ் விளக்கு பொருத்தப்பட்டிருந்தன.

4 மாதங்களுக்கு முன் விளக்குகள் பழுதானதால் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் பழுது பார்க்க எடுத்து சென்றனர்.

இன்று வரை அதனை மீண்டும் பொருத்தாதால் கீழடி விலக்கு இருளில் மூழ்கி கிடக்கிறது. இரவு நேரத்தில் வரும் வாகனங்களுக்கு கீழடி விலக்கில் வாகனங்கள் திரும்புவது தெரியாமல் அடிக்கடி விபத்து நேரிடுகின்றன.

போலீசாரின் வாகனச் சோதனைக்கும் ஹைமாஸ் விளக்கு பயனுள்ளதாக இருந்தது. இருட்டாக இருப்பதால் வாகனச் சோதனையும் நடத்த முடிவதில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us