/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மட்டிக்கரைபட்டியில் பூச்சொரிதல் விழா
/
மட்டிக்கரைபட்டியில் பூச்சொரிதல் விழா
ADDED : ஏப் 20, 2025 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே மட்டிக்கரைப்பட்டி சக்தி முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடந்தது.
ஏப். 11ல் அபிஷேகம், காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயில் கருப்பர் சன்னதியில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து நேர்த்திக் கடனுக்காக தீச்சட்டி எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.
இன்று காலை பொங்கல் விழாவும் மாலையில் முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு வைத்தலும் நடைபெறுகிறது.

