/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாகனங்கள் நிறுத்துவதால்சேதமடையும் நடை பாதை
/
வாகனங்கள் நிறுத்துவதால்சேதமடையும் நடை பாதை
ADDED : ஜன 02, 2026 05:33 AM

சிவகங்கை: சிவகங்கை மஜித்ரோட்டில் உள்ள சாத்தப்பர் ஊரணி ரூ.72 லட்சம் செலவில் புனரமைக்கும் பணி நடந்தது. இந்த பணியை ஜூனில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கானொளி வாயிலாக துவக்கி வைத்தார். ஊரணியை துார்வாரி கரை அமைத்து கரையில் பேவர் பிளாக் நடை பாதை அமைக்க வேண்டும்.
ஊரணியை சுற்றி வேலி அமைத்து மரக்கன்றுகள் நட்டு நடைபாதையில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும். தற்போது பணி நடந்து வருகிறது. இன்னும் நிறைவடையவில்லை.வாகனங்களை புதிதாக அமைத்துள்ள நடைபாதையில் நிறுத்துகின்றனர். இதனால் நடைபாதை சேதமடைய வாய்ப்புள்ளது.
ஏற்கனவே நகராட்சியில் உள்ள செட்டி ஊரணி, செக்கடி ஊரணி, உடையார் சேர்வை ஊரணிகள் பல லட்சம் மதிப்பில் மேம்பாட்டு பணி செய்தும் அவற்றை முறையாக பராமரிக்காததால் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் நகரில் உள்ள மேம்பாட்டு பணி செய்த ஊரணிகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

