/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட வெளிநாட்டு பயணிகள் வியப்பு
/
கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட வெளிநாட்டு பயணிகள் வியப்பு
கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட வெளிநாட்டு பயணிகள் வியப்பு
கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட வெளிநாட்டு பயணிகள் வியப்பு
ADDED : பிப் 01, 2024 04:30 AM

கீழடி : கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை கண்ட சுற்றுலா பயணிகள்பெரும் வியப்பிற்குஉள்ளாகியுள்ளனர்.
கீழடியில் அருங்காட்சியகம் 18 கோடியே 40 லட்ச ரூபாய் செலவில் 10 கட்டட தொகுதிகளுடன் கட்டப்பட்டு கடந்தாண்டு மார்ச் 5ம் தேதி திறக்கப்பட்டு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரில் கண்டு ரசித்து வருகின்றனர்.
கீழடியில் பல்வேறு நாட்டின் பொருட்கள் கண்டறியப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஜெர்மன் நாட்டில்பயன்படுத்தப்பட்டு வரும் மணிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று அருங்காட்சியகத்திற்கு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மார்க் என்பவர் தனது மனைவியுடன் வருகை தந்திருந்தார்.
அருங்காட்சியகத்தை கண்டறிந்த அவர் கூறுகையில், 2600 வருடங்களுக்கு முன் ஐரோப்பா கண்டத்தில் இருந்து கீழடிக்கு வணிகம் நடந்திருப்பதும், அக்காலத்தில் பேரரசர்கள் குடும்பத்தினர் மட்டும் தான் படித்திருப்பார்கள், ஆனால் இந்த சமூக மக்கள் எழுத, படிக்க தெரிந்திருப்பதும் ஆச்சரியமளிக்கிறது.
ஜெர்மன் நாட்டு மணிகள், பாசிகள் உள்ளிட்டவைகளை காணும் போது மிகவும் ஆச்சர்யமாகவும், அதிசயமாகவும் உள்ளது. இன்று எங்கள் நாட்டில் கூட இதுபோன்ற மணிகள் கிடைப்பதில்லை. இந்தியாவில் இதனை கண்டறிந்து காட்சிப்படுத்தியுள்ளது மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
நவீன வசதிகள் உள்ள இந்த காலத்தில் பொருட்களை கொண்டு வருவது சாதாரண காரியம், 2600 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு வணிக ரீதியாக கொண்டு வந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது, என்றார்.
இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சஞ்சீவ் கூறுகையில், கீழடி அருங்காட்சியகத்தில் 2600 ஆண்டுகளுக்கு முந்தையபொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை காண மிகுந்த ஆர்வத்துடன் வந்தோம்.
இணையதளங்களில் உடனுக்குடன் அருங்காட்சியகம் பற்றிய தகவல்கள் அப்டேட் செய்யப்படுவதில்லை. இதனால் நாங்கள் திட்டமிட்டு வந்து செல்ல முடியவில்லை.
ஒரு மாதத்திற்கு முன்பே நாங்கள் கீழடி செல்ல திட்டமிட்டு டிக்கெட் பதிவு செய்திருந்தோம், செவ்வாய்கிழமை கீழடி வர திட்டமிட்டிருந்த நிலையில் செவ்வாய்கிழமை விடுமுறை என தற்போது தான் அப்டேட் செய்துள்ளனர். இதனால் அலைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.
எனவே உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அப்டேட் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.