/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காலி பணியிடங்களால் பணியில் தொய்வு கேள்விக்குறியாகும் வனப் பாதுகாப்பு
/
காலி பணியிடங்களால் பணியில் தொய்வு கேள்விக்குறியாகும் வனப் பாதுகாப்பு
காலி பணியிடங்களால் பணியில் தொய்வு கேள்விக்குறியாகும் வனப் பாதுகாப்பு
காலி பணியிடங்களால் பணியில் தொய்வு கேள்விக்குறியாகும் வனப் பாதுகாப்பு
ADDED : செப் 27, 2024 06:39 AM
காரைக்குடி: காரைக்குடி உட்பட சிவகங்கை மாவட்ட வன அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, கல்லல், புதுவயல், சிவகங்கை பகுதிகளில் வன அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இவ் அலுவலகங்களில் ஒரு ரேஞ்சர் தலைமையில் 5 வனவர், 5 வனக் காப்பாளர், 5 வன காவலர் பணி செய்ய வேண்டும். ஆனால், பல வன அலுவலகங்களில் இரண்டு வனவர் மட்டுமே உள்ள நிலையில் ஒரு சில வனக் காப்பாளர்களும், வனக்காவலர்களும் மட்டுமே உள்ளனர்.
காரைக்குடி கல்லல் புதுவயல் பகுதியில் வனத்துறைக்கு 10 ஆயிரம் எக்டேருக்கும் அதிகமான வனப்பகுதி உள்ளன. வனத்தை பாதுகாத்தல், வனத்தின் சுற்றுச்சூழலை கண்காணித்தல், வனவிலங்குகளை பாதுகாத்தல், வனத்துறைக்கு சொந்தமான மரங்களை பாதுகாத்தல், வேட்டையாடுதலை கண்டறிதல், காடுகளை தணிக்கை செய்து அறிக்கை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை, வனவர் வனக்காப்பாளர் மற்றும் வன காவலர் செய்ய வேண்டும்.
ஆனால் வன அலுவலகங்களில் ஒரு சில வனவரும் ஒரு சில வன காவலர்கள் மட்டுமே உள்ளதால் இப்பணிகளில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.
வனங்களை பாதுகாக்க போதிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.