ADDED : செப் 17, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை, செப். 18-–
மானாமதுரையில் சாலை பணியாளர் சங்க அமைப்பு தினம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மாரி தலைமை வகித்தார். கிளை தலைவர் பாண்டி முன்னிலை வகித்தார். நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன் சங்க கொடியேற்றினர். அரசு ஊழியர் சங்க கிளை துணை தலைவர் தமிழ்செல்வி, மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், மானாமதுரை வட்ட க்கிளை தலைவர் சிவக்குமார், கோட்ட தலைவர் ஆசைத்தம்பி பங்கேற்றனர். சிவகங்கையில் நடந்த விழாவிற்கு மாவட்ட பொருளாளர் சதுரகிரி தலைமை வகித்தார். திருப்புத்துாரில் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் அமைப்பு தினம் கொண்டாடினர்.
////
