/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் பாராக மாறிய நான்கு வழிச்சாலை மேம்பாலம்
/
மானாமதுரையில் பாராக மாறிய நான்கு வழிச்சாலை மேம்பாலம்
மானாமதுரையில் பாராக மாறிய நான்கு வழிச்சாலை மேம்பாலம்
மானாமதுரையில் பாராக மாறிய நான்கு வழிச்சாலை மேம்பாலம்
ADDED : நவ 22, 2025 02:54 AM

மானாமதுரை: மானாமதுரை நான்கு வழி சாலை மேம்பாலத்தில் அமர்ந்து மது குடிப்பவர்கள் பாட்டிலை உடைத்து போட்டு விட்டு செல்கின்றனர்.
மதுரையில் இருந்து மானாமதுரை வழியாக பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தல்லாகுளம் தர்ம முனீஸ்வரர் கோயில் அருகே ஆரம்பிக்கும் நான்கு வழிச்சாலை மேம்பாலம் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் முன் முடிவடைகிறது.
இந்தப் பாலத்தின் மையத்தில் நடைபாதையில் இரவு நேரங்களில் மது குடிப்பவர்கள் மது பாட்டில்களை ரோட்டில் உடைத்து போடுவதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பஞ்சராவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். போதையில் வாகனங்கள் வரும்போது ரோட்டில் நின்று கொண்டு பிரச்னையும் செய்வதால் விபத்து அபாயமும் ஏற்படுகிறது. நெடுஞ்சாலை ரோந்து போலீசார் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.