/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மேலுார் ரோட்டில் ரூ.78 கோடியில் நான்கு வழிச்சாலை தரம் ஆய்வு
/
மேலுார் ரோட்டில் ரூ.78 கோடியில் நான்கு வழிச்சாலை தரம் ஆய்வு
மேலுார் ரோட்டில் ரூ.78 கோடியில் நான்கு வழிச்சாலை தரம் ஆய்வு
மேலுார் ரோட்டில் ரூ.78 கோடியில் நான்கு வழிச்சாலை தரம் ஆய்வு
ADDED : டிச 14, 2024 06:20 AM
சிவகங்கை சிவகங்கையில் -வி.மலம்பட்டி வரை ரூ.78 கோடியில் நடைபெற்ற நான்கு வழிச்சாலை பணிகளின் தரம் குறித்து மதுரை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சோதனை செய்தார்.
ராமநாதபுரம் - மேலுார் மாநில நெடுஞ்சாலை இரண்டு வழிச்சாலையாக உள்ளது. இந்த ரோட்டை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டது. சிவகங்கை அருகே காமராஜர் காலனியில் இருந்து வி.மலம்பட்டி வரையிலான 11.49 கி.மீ., துார ரோட்டை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த அரசு ரூ.78 கோடி ஒதுக்கியது.
தற்போது இந்த ரோட்டில் பணிகள் முடிவடைந்துள்ளன. கூட்டுறவுபட்டி முதல் மலம்பட்டி வரையிலான பணி நடைபெற்று வருகிறது. நான்கு வழிச்சாலை பணியின் தரம் குறித்து மதுரை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆர்.கே.,ரமேஷ், சிவகங்கை கோட்ட பொறியாளர் எஸ்.கே., சந்திரன், உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராகிம் ஆகியோர் கூட்டுறவுபட்டி அருகே பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.