தேவகோட்டையில் கடத்தல் நான்கு பேர் கைது: கார் பறிமுதல்
தேவகோட்டையில் கடத்தல் நான்கு பேர் கைது: கார் பறிமுதல்
ADDED : மார் 13, 2026 07:25 AM
தேவகோட்டை: வெளிநாட்டிலிருந்து வரும் தங்கம்,பணத்தை வாங்கி கொடுக்கும் தொழிலில் ஏற்பட்ட தகராறில் தாக்கி கடத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த அமானுல்லா மகன் முகமது ஷெரீப். 57., இவர் சென்னை தாம்பரத்தில் வசித்து வருகிறார்.வெளிநாட்டில் வசிக்கும் நபர்கள் சிலர் இங்குள்ளவர்களுக்கு தங்கம்,பணம்,பொருட்களை அனுப்பி முகமது ெஷரீப் மூலம் கொடுத்து வந்தனர். சிலருக்கு பொருட்கள் சரியாக செல்லாததால் வெளிநாட்டில் வசிப்பவர்கள் இங்குள்ள வேறு நண்பர்களிடம் கூறி அவரை கண்காணிக்க கூறியுள்ளனர். தொழில் தொடர்பாக தொண்டிக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து நேற்று முன்தினம் முகமது ெஷரீப் தேவகோட்டை வந்தார். ராம்நகர் தானுச்சாவூரணி ரோட்டில் உள்ள லாட்ஜில் தங்கினார் . பின் தொடர்ந்து வந்த கும்பல் தங்கியிருந்த லாட்ஜ்க்கு வந்தனர்.
தாக்கி கடத்தல்: இளையான்குடி காஜாநஜூமுதீன் 42., விழுப்புரம் குப்புச்சாமி 33., புஸ்பநாதன் 27., சின்னக்கோட்டை குப்பம் செல்வக்குமார் 21.,உட்பட ஏழு பேர் லாட்ஜ் முன்பு நின்ற முகமது ஷெரீப்பை தாக்கி காரில் கடத்தினர். அருகில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கடத்தியவர்களை போலீசார் பிடித்தனர். விசாரணை நடத்திய போலீசார் முகமது ஷெரீப் கொடுத்த புகாரில் காஜாநஜூமுதீன், குப்புச்சாமி, புஷ்பநாதன், செல்வக்குமார் ஆகிய நான்கு பேரை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
