திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி பி.என்.பி.உழவர் பயிற்சி மையத்தில் இலவச வேளாண் தொழில்,அழகுக்கலை பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த மையத்தில் ஒரு நாள் பயிற்சியாக ஆக.11ல் வெட்டி வேர் வளர்ப்பு, ஆக.12ல் தேனீ வளர்ப்பு, ஆக.13ல் திருந்திய நெல்சாகுபடி, ஆக.19ல் காளான் வளர்ப்பு, ஆக.20ல் உணவுபொருள் உரிமம்,பேக்கிங்,லேபிளிங், ஆக.25ல் நாட்டுக்கோழி வளர்ப்பு, ஆக.26ல் மாடித் தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.
இருநாள் பயிற்சியாக ஆக.7ல் மெழுகுவர்த்தி, சாம்பிராணி தயாரித்தல், ஆக.21ல் ஊறுகாய் தொக்கு, ஆக.28 ல் மசாலா பொடி தயாரித்தல் நடைபெறும்.
மேலும், ஒரு வார பயிற்சியாக கைப்பின்னல் கால்மிதியடி தயாரித்தல் ஆக.18ல் துவங்கி 7 நாட்கள் நடைபெறும். இரு வாரப்பயிற்சியாக அழகுக்கலை பயிற்சி ஆக.1ல் துவங்கி 14 நாட்கள் நடைபெறும். பயிற்சி பெற விரும்புவர்கள் 94885 75716ல் தொடர்பு கொள்ளலாம்.

