/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மழைநீரில் நனைந்து வீணாகும் இலவச சைக்கிள் தொடர் மழையால் பொருத்தும் பணி பாதிப்பு
/
மழைநீரில் நனைந்து வீணாகும் இலவச சைக்கிள் தொடர் மழையால் பொருத்தும் பணி பாதிப்பு
மழைநீரில் நனைந்து வீணாகும் இலவச சைக்கிள் தொடர் மழையால் பொருத்தும் பணி பாதிப்பு
மழைநீரில் நனைந்து வீணாகும் இலவச சைக்கிள் தொடர் மழையால் பொருத்தும் பணி பாதிப்பு
ADDED : நவ 25, 2025 04:50 AM

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கான இலவச சைக்கிள்கள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. மழையால் பொருத்தும் பணியும் மந்த மாக நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மாணவ மாணவியருக்கு, விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் சைக்கிள்கள் வழங்கப்படுகிறது. நடப்பாண்டு, ரூ.241 கோடி மதிப்பீட்டில் 5.34 லட்சம் மாணவ மாணவியருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது.
சிவகங்கை மாவட் டத்தில் உள்ள 105 பள்ளி களில் பயிலும் 11 ஆயிரத்து 449 மாணவ, மாணவியர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது. சாக்கோட்டை வட்டாரத்தில் உள்ள, புதுவயல், கோட்டையூர், பள்ளத்துார், காரைக்குடி, மித்ராவயல், பீர்க்கலைக்காடு அமரா வதிப்புதுார் உட்பட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு சைக்கிள் வழங்குவதற்காக, சைக்கிள் பாகங்கள் பொருத்தும் பணி காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்து வருகிறது.
நவ. 14ம் தேதி சைக்கிள் வழங்கும் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார். பாகங்கள் பொருத்தப்பட்ட சைக்கிள் பள்ளி களுக்கு அனுப்பப்பட்டதை தொடர்ந்து, மீண்டும் சைக்கிள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
சைக்கிள் பொருத்தும் பணிக்கு போதிய வசதி இல்லாமல் தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். வடமாநில இளைஞர்கள் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். வகுப்பறை வாயிலில் சிறிய இடத்தில் சைக்கிள் பொருத்துவதோடு அதே இடத்தில் உணவு சமைத்து உண் கின்றனர். இவர்களுக்கு ஒரு சைக்கிள் பொருத்த ரூ.90 ஊதியமாக வழங்கப்படுகிறது.
கடந்த சில தினங் களாக கனமழை பெய்து வரும்நிலையில் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தவிர சைக்கிள் உதிரி பாகங்கள், பொருத்தப்பட்ட சைக்கிள்கள், மழை நீரில் நனைந்து வருகிறது.
ஏற்கனவே, பல மாதங்களாக வெயிலில் சைக்கிள் மற்றும் உதிரி பாகங்கள் கிடந்த நிலையில் தற்போது மழையிலும் கிடப்பதால் சைக்கிள் பாகங்கள் துருப்பிடித்து வீணாகும் நிலை ஏற்பட்டு வருகிறது.

