ADDED : மார் 17, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலைக்கிராமம்: சாலைக்கிராமம்  சமுதாய கூடத்தில் டி.சி.சி.ஏ.,பப்ளிக் பவுண்டேஷன், சிவகங்கை மாவட்ட கேபிள் டி.வி.,ஆப்பரேட்டர்கள் பொதுநல சங்கம், சங்கரா கண் மருத்துவமனை  சார்பில் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமில் ரத்த அழுத்தம்,சர்க்கரை நோய் பரிசோதிக்கப்பட்ட பின்னர்தூரப்பார்வை,கிட்ட பார்வை குறித்து சோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான கண்ணாடிகள் வழங்கப்பட்டன. மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர்.

