/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச பயிற்சி
/
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச பயிற்சி
ADDED : நவ 08, 2024 04:25 AM
சிவகங்கை: சிவகங்கை வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., டி.என்.யு.எஸ்.ஆர்.பி., மற்றும் டி.ஆர்.பி., போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்படுவதாக, கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இங்கு பயிற்சி பெறுவோர் தன்னார்வ பயிலும் வட்ட நுாலகத்தில், தேர்வுக்கு தேவையான புத்தகங்களை பயன்படுத்தி கொள்ளலாம். இது தவிர 'www.tamilnaducareerservices.tn.gov.in' என்ற இணையதளத்திலும் பாடக்குறிப்பு, முந்தைய தேர்வுக்கான மாதிரி வினாக்களை பார்த்து பயன்பெறலாம்.
செப்., 14 அன்று துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்பதிவாளர் உட்பட 2,327 பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வு நடந்தது. இப்பதவிகளுக்கான முதன்மை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகளும் இங்கு சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.
பயிற்சியின் இடையே பயிற்சி தேர்வு, மாநில அளவில் மாதிரி தேர்வும் நடத்தப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர், சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மைய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என்றார்.

