/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அடிக்கடி நிறுத்தப்படும் அரசு பஸ் கல்லல் - -காரைக்குடி மக்கள் அவதி
/
அடிக்கடி நிறுத்தப்படும் அரசு பஸ் கல்லல் - -காரைக்குடி மக்கள் அவதி
அடிக்கடி நிறுத்தப்படும் அரசு பஸ் கல்லல் - -காரைக்குடி மக்கள் அவதி
அடிக்கடி நிறுத்தப்படும் அரசு பஸ் கல்லல் - -காரைக்குடி மக்கள் அவதி
ADDED : ஆக 11, 2025 03:55 AM
சிவகங்கை: டிரைவர் இருந்தால் மட்டுமே சிவகங்கையில் இருந்து பாகனேரி, கல்லல் வழியாக காரைக்குடிக்கு புறநகர் பஸ்சை அரசு போக்குவரத்து கழகம் இயக்குவதால் பஸ் வசதி இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
அரசு போக்குவரத்து கழகம் சிவகங்கை கிளை சார்பில் சிவகங்கையில் இருந்து நாட்டரசன்கோட்டை, நடராஜபுரம், பனங்குடி, பாகனேரி, செம்பனுார், கல்லல் வழியாக காரைக்குடிக்கு (60 கி.மீ., துாரம்) தினமும் காலை, மாலை, இரவில் 4 முறை அரசு புறநகர் பஸ் இயங்கி வந்தது.
இந்த பஸ் மூலம் நாட்டரசன்கோட்டை, பாகனேரி, பனங்குடி, கல்லலில் இருந்து காரைக்குடி கல்லுாரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் ஏராளமானவர்கள் சென்று வந்தனர்.
அதே போன்று காரைக்குடியில் இருந்தும் சிவகங்கை வரும் பஸ்சில் ஏராளமான கிராமங்களை சேர்ந்த பயணிகள் வந்தனர்.
இந்த பஸ்சை கடந்த சில நாட்களாக டிரைவர், கண்டக்டர்' இருந்தால் மட்டுமே இயக்குவதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக வாரத்திற்கு 4 நாட்கள் இந்த பஸ் சிவகங்கை - கல்லல் - காரைக்குடி இடையே இயங்கப்படுவதில்லை.
கிராமப்புறங்களை சேர்ந்த மக்கள் காரைக்குடி, சிவகங்கைக்கு சென்று வர பஸ் வசதியின்றி சிரமம் அடைகின்றனர்.
அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் இந்த பஸ்சை தடையின்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.