/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் அடிக்கடி மின்வெட்டு பொதுமக்கள், வர்த்தகர்கள் தவிப்பு

ADDED : ஆக 12, 2025 11:30 PM
காரைக்குடி: காரைக்குடியில் மின்தடை அறிவித்த நாளை விட்டுவிட்டு, மற்ற நாட்களில் அடிக்கடி மின்வெட்டு செய்வதால், பொதுமக்கள், வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். -
காரைக்குடியில் ஆக.,2ல் மின்தடை இருக்கும் என மின்வாரியம் தெரிவித்தது. இந்நிலையில் அன்றைய தினம் மின்வெட்டு செய்யப்படவில்லை. ஆனால், மின்வெட்டு செய்யப்படாத நாட்களுக்கு மாற்றாக எந்தவித முன்அறிவிப்பின்றி காரைக்குடியில் அடிக்கடி மின்வெட்டு நடக்கிறது.
இதனால், பொதுமக்கள், வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்துமின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது, பராமரிப்பு பணிக்காக மின்வெட்டு செய்கிறோம்.
இதுகுறித்த அறிவிப்பு அந்தந்த மின் பயனீட்டாளர் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி விடப்பட்டுள்ளது, என்றனர்.