நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டையில் கந்த சஷ்டி கழக 79 ம் ஆண்டு விழா நடந்தது. தலைவர் வீரப்பன் தலைமை வகித்தார்.
ஹிந்து அறநிலைய அமைச்சர் துவக்கி வைத்தார். செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். பெங்களூரூ ஜெயேந்திரபுரி மகா சுவாமிகள் ஆசியுரை வழங்கினர்.
முன்னாள் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சொக்கலிங்கம், ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திரன், சீனிவாசன், பழ.கருப்பையா, இணை செயலாளர் மீனாட்சி சுந்தரம், பொருளாளர் முத்தையன் பங்கேற்றனர்.
ஆசிரியர் ஜெயம்கொண்டான், ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. பல்வேறு இசை, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.