தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விநாயகர் சிலை ஊர்வலம்

 விநாயகர் சிலை ஊர்வலம்

 விநாயகர் சிலை ஊர்வலம்


ADDED : செப் 19, 2026 02:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 02:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: -: சிவகங்கையில் ஹிந்து முன்னணி மற்றும் பா.ஜ., சார்பில் விநாயகர் சதுர்த்தி செப்., 8ம் தேதி காப்பு கட்டுடன் விழா துவங்கியது. சதுர்த்தியன்று நகர் முழுவதும் 16 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, தினமும் சிறப்பு பூஜை செய்தனர்.

நேற்று மாலை 5:00 மணிக்கு நகரில் அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக சிவன்கோயிலுக்கு வந்தது. ஹிந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் அக்னிபாலா தலைமையில் ஊர்வலம் நடந்தது. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்புரை ஆற்றினார். முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியநாதன், முன்னாள் கோட்ட பொறுப்பாளர் சொக்கலிங்கம், நகர் தலைவர் உதயா, பா.ஜ., ஓ.பி.சி., அணி மாநில பொது செயலாளர் நாகேஸ்வரன் ஹிந்து முன்னணி, பா.ஜ., மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். சிவன் கோயிலில் ஊர்வலம் துவங்கி தேரோடும் வீதிகளை சுற்றி வந்து, தெப்பக்குளத்தில் கரைக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us